சீன செயலிகளை உடனடியாக முடக்குங்க… இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

சீன செயலிகளை உடனடியாக முடக்குங்க… இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் அவசர பிரிவின்கீழ் டிக்டாக் உள்பட 59 சீன மொபைல் செயலிகளை முடக்குங்க என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு இந்த உத்தரவை 2 தொகுப்புகளாக வெளியிட்டுள்ளது. முதல் செட் தொகுப்பு உத்தரவில் 35 செயலிகள் மற்றும் சீனாவிலிருந்து வெளியே இருந்த செயல்படும் 24 செயலிகளும் அடங்கும். இந்த 59 சீன செயலிகளையும் முடக்க இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என தொலைத்தொடர்பு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன செயலிகளை உடனடியாக முடக்குங்க… இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

மேலும் மத்திய அரசு சீன செயலிகளின் ஐ.பி. அட்ரசஸ்களுடன் வெப் லிங்கையும் இன்டர்நெட் சேவை நிறுவனங்களிடம் வழங்கியுள்ளது. இதனால் அந்நிறுவனங்களால் சீன செயலிகளை எளிதாக முடக்க முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்திய அரசாங்கத்தின் சீன செயலிகள் தடை நடவடிக்கை தீவிரமாக கவலைப்படுவதாகவும், அதனை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீனா நேற்று தெரிவித்தது.

சீன செயலிகளை உடனடியாக முடக்குங்க… இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு சீன தரப்பு தீவிரமாக கவலை கொண்டுள்ளது மற்றும் உறுதியாக எதிர்க்கிறது. இது சர்வதேச வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் பொதுவான போக்குக்கு எதிரானது. மேலும், நுகர்வோர் நலன்களுக்கும், இந்தியாவில் சந்தை போட்டிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.