சீனாவின் சுயகட்டுப்பாட்டை பலகீனமாக நினைக்காதீங்க… இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த சீனாவின் குளோபல் டைம்ஸ்

 

சீனாவின் சுயகட்டுப்பாட்டை பலகீனமாக நினைக்காதீங்க… இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த சீனாவின் குளோபல் டைம்ஸ்

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவு செய்தன. இதனையடுத்து இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்தித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பு படைகளும் பின்வாங்கி. அதேசமயம் சீன படைகள் சில இடங்களில் பின்வாங்கவில்ல. இதனையடுத்து இந்தியாவும் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்தது மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்தனர்.

சீனாவின் சுயகட்டுப்பாட்டை பலகீனமாக நினைக்காதீங்க… இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த சீனாவின் குளோபல் டைம்ஸ்

இதனையடுத்து இரு தரப்பு மோதலில் ஈடுப்பட்டனர். சீன வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுப்பட்டனர். இந்த தாக்குதலில் நமது தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. மேலும் சீன தரப்பில் 5 வீரர்கள் பலியானதாக நமது ராணுவம் தெரிவித்தது. ஆனால் சீன ராணுவம் இது குறித்து வாயை திறக்கவில்லை. இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரி பத்திரிகையும், சீன அரசு நிர்வாகத்தின் ஊது குழலாக கருதப்படும் குளோபல் டைம்ஸ் எல்லையில் இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதை ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய ராணுவத்துக்கு மிரட்டலும் விடுத்துள்ளது.

சீனாவின் சுயகட்டுப்பாட்டை பலகீனமாக நினைக்காதீங்க… இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்த சீனாவின் குளோபல் டைம்ஸ்

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் வாங் வென்வென் டிவிட்டரில், சீன-இந்திய எல்லையில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 11 வீரர்கள காயம் அடைந்தனர் என பதிவு செய்து இருந்தார். குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் ஹீ ஜிஜின் டிவிட்டரில், எனக்கு தெரிந்தவற்றின அடிப்படையில், கல்வான் பள்ளத்தாக்கு நடந்த மோதலில் சீன தரப்பினரும் உயிர் இழந்தனர். நான் இந்திய தரப்பிடம் சொல்ல விரும்புகிறேன், திமிர்தனம் கொள்ளாதீர்கள், சீனாவின் கட்டுப்பாட்டை பலகீனம் என தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். இந்தியா மோதுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்காக பயப்பட மாட்டோம் என பதிவு செய்து இருந்தார்.