கட்டிட பணிக்கு தோண்டிய குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

 

கட்டிட பணிக்கு தோண்டிய குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திருச்சி

திருச்சி அருகே கட்டுமான பணிக்கு தோண்டிய குழியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிழிந்தார்.

திருச்சி ஏர்போர்ட் ராஜமாணிக்கம்பிள்ளை நகரை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சக்திவேல்(32). இவருக்கு திருமணமாகி பாண்டிஶ்ரீ(5) உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர். சக்திவேல் தனது வீட்டின் அருகே உள்ள காலிஇடத்தில் வீடு கட்டுவதற்காக 4 அடி ஆழத்திற்கு குழிதோண்டி வைத்துள்ளார். அந்த குழியில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, அதிளவு தண்ணீர் தேங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி பாண்டிஶ்ரீ கட்டிட பகுதியில் விளையாடி கொண்டுருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறிவிழுந்த சிறுமி, நீரில் மூழ்கினார். இதனை அறியமால் பெற்றோர் சிறுமியை காணாமல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

கட்டிட பணிக்கு தோண்டிய குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

பின்னர், சிறுமி குழிக்குள் கிடப்பத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் வளாகத்தில் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏர்போர்ட் காவல்நிலைய போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.