குட் நியூஸ்.. சூயஸ் கால்வாயில் கரைத் தட்டிய ராட்சத கப்பல் மிதக்கத் தொடங்கியது!

 

குட் நியூஸ்.. சூயஸ் கால்வாயில் கரைத் தட்டிய ராட்சத கப்பல் மிதக்கத் தொடங்கியது!

சீனாவில் இருந்து நெதர்லாந்துக்கு சென்று கொண்டிருந்த ராட்சத எவர் கிவன் சரக்கு கப்பல் கடந்த 23ம் தேதி, சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைத் தட்டி நின்றது. சுமார் 1300 அடி நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட அந்த கப்பல் கால்வாய்க்கு குறுக்கே நின்றதால், பிற கப்பல்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலிலேயே தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

குட் நியூஸ்.. சூயஸ் கால்வாயில் கரைத் தட்டிய ராட்சத கப்பல் மிதக்கத் தொடங்கியது!

கப்பலை அங்கிருந்து அகற்றும் பொருட்டு, கப்பலில் இருக்கும் சரக்குகளை அப்புறப்படுத்துமாறு எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா அல் சிசி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இக்கப்பலில் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களும் கச்சா எண்ணெயும் இருப்பதால், பொருட்களை அகற்றும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, எவர் கிவன் கப்பலில் இடிக்காத வண்ணம் பிற கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சூயஸ் கால்வாயை கடந்து கொண்டிருக்கின்றன.

குட் நியூஸ்.. சூயஸ் கால்வாயில் கரைத் தட்டிய ராட்சத கப்பல் மிதக்கத் தொடங்கியது!

கால்வாயின் 3/4 பரப்பளவில் இக்கப்பல் சிக்கிக் கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் நீடிக்கிறது. பவுர்ணமி தினத்தன்று அலை வேகமாக எழும்பும். அச்சமயம் கப்பல் அசைந்து கரையில் இருந்து வெளியேறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், கரை தட்டி நிற்கும் இந்த கப்பல் தற்போது மிதக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவர் கிவன் சரக்கு கப்பலில் பணிபுரியும் 25 சிப்பந்திகளும் இந்தியர்கள். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.