ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிப்பு காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

 

ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிப்பு காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது எனவே இதனைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது. எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை இதையடுத்து கடந்த ஜூலை மாதம் வந்த நான்கு நான்கு கிழமைகளிலும் தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை மீண் டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது இதை யொட்டி இந்த மாதம் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஈரோட்டில் நாளை 5-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வில்லாத ழுழு ஊரடங்கு

ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிப்பு காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

கடைப்பிடிக்கப்படுகிறது இதனால் நாளை விசைத்தறிகள் ,தொழிற்சாலைகள் ,ஜவுளிக்கடைகள், டாஸ்மாக் கடைகள் ,காய்கறிகள், உட்பட அனைத்து கடைகளும் இயங்காது ஆனால் அத்தியாவசிய பொருட்களான பால் ,மருந்தகம் வழக்கம்போல் செயல்படும் மேலும் அம்மா உணவகமும் வழக்கம் போல் செயல்படும். முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். குறிப்பாக சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர

ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிப்பு காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் ஈரோட்டிற்கு வரும் வாகனங்கள்,அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது இன்று வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது இதேபோல் சின்ன மார்க்கெட் பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தை சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேலும் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது