‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்கம் – கொரோனாவால் இறந்த 1000 பேரின் விவரம் வெளியீடு

 

‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்கம் – கொரோனாவால் இறந்த 1000 பேரின் விவரம் வெளியீடு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவால் இறந்த குறிப்பிட்ட சில 1000 பேரின் விவரங்கள் இன்றைய ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 97,048 பேர் இறந்துள்ளனர். மேலும், இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 4 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கத்தில் இருந்து பிழைத்து வந்துள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து விடும்.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா நோயால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரபல ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழின் இன்றைய முதல் பக்கத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்த குறிப்பிட்ட சில 1000 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த 1000 பேர் என்பது வெறும் ஒரு சதவீதம் தான் என்றாலும் இது வெறும் எண்கள் அல்ல என அந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த பட்டியலில் பல பிரபலங்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தி நியூ யார்க் பத்திரிகையின் தேசிய ஆசிரியர் மார்க் லேசி இந்த முதல் பக்கம் குறித்து கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது நாம் எப்படி வாழ்ந்தோம். எவ்வளவு பேரை பறிகொடுத்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.