தமிழகத்தில் முதல் தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது!

தமிழகத்தில் முதல் தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது!

தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது!

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி,கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும், பிரசாரங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் .

தமிழகத்தில் முதல் தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகத்தில் 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. கோவின் செயலில் பதிவு செய்த 4.30 லட்சம் பேரில் முதற்கட்டமாக 2.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி மருத்துவர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் செந்திலுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டீன் தேரணிராஜனுக்கு கோவாக்சின் போடப்பட்டது.