வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முதல் தமிழ் பெண்மணி !

 

வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முதல் தமிழ் பெண்மணி !

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், கமலா ஹாரீஸின் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். கமலா ஹாரீஸின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தமிழ் இனத்தை பூர்வீகமாக கொண்ட பெண்மணி என்பதோடு, கறுப்பினத்தவரின் பெண் பிரதிநிதியாகவும் பார்க்கப்படும் கமலா, அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையையும் இன்று பெற்றுள்ளார்.

வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முதல் தமிழ் பெண்மணி !

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்த தமிழ் பெண்மணியின் கை ஓங்கி ஒலித்திருக்கும் இந்த பெருமைக்குரிய நேரத்தில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல வர்த்தக குழுமமாக அறியப்படும் சிட்டி குழுமத்தின் சர்வதேச நுகர்வோர் வங்கி பிரிவின் தலைவராக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முத்துக்குமார்