பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

 

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

ஞாயிற்றுக்கிழமை எப்பிசோட். எவிக்‌ஷன் நடக்கும் நாள். இந்த சீசனில் ஒரு வாரம் ஆஜித், எவிக்‌ஷன் ப்ரி பாஸ் வைத்து எவிக்‌ஷனிலிருந்து எஸ்கேப், இன்னொரு வாரம் தீபாவளி என்பதால் எவிக்‌ஷனுக்கு லீவு… அதனால், இந்த சீசனிலில் எவிக்‌ஷன் ரொம்ப குறைவாக நடப்பதுபோல இருக்கிறது. ஆனால், பலரும் ரமேஷ் வெளியேறுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் சம்யுக்தா வெளியேறியது ஆச்சர்யம்தான். அவர் வெளியேறியதற்கு சில காரணங்கள் இருக்கவே இருக்கின்றன. அவற்றைக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் ஞாயிற்றுக்கிழமை

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

‘நீங்க நல்லவரா… கெட்டவரா?’ என்ற கேள்வியோடு எண்ட்ரி கொடுத்தார் கமல். வீட்டுக்குள்ளும் அந்தக் கேள்வியோடு சென்றார். ‘நாங்க நடித்த கேரக்டர் பேரைச் சொல்லி கூப்பிடும்போது ஏன் எங்க பேரைச் சொல்லலனு வருத்தப்படுவோம். இப்போ உங்களை உங்களாகக் காட்டுவதற்கு பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்திருக்கு’னு நீண்ட விளக்கம் கொடுத்து, ‘உங்க கையில இருக்கும் கோப்பையில் காபி இருந்து சிந்தும்போது அது டீயாக மாறாது. வேண்டுமானால் சிந்தாமல் காபியைக் குடிச்சிட்டு, டீ நல்லா இருந்துச்சுனு சொன்னீங்கன்னா… ஒருவேளை இவங்க நம்பிடுவாங்க’னு சொன்ன உதாரணம் செம.

’கலீஜ்’ என்பதன் அர்த்தம் தெரியாமலே உள்ளே பெரிய சண்டை நடந்திருக்கு. சொன்ன சம்யுக்தாவுக்கும் புரியல… திட்டு வாங்கின ஷனம்க்கும் புரியல. கமல் விளக்கினதும் சம்யுக்தா முழித்தார். அப்படியே ஆரி – சம்யுக்தா பஞ்சாயத்துக்கு வந்தார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

‘உங்க தாய்மையை அவர் குறைச்சி மதிப்பிடல’னு சொல்லி ’இது குறுபடம் அல்ல… அர்ச்சனா சொன்ன குருமா படமும் அல்ல.. இது வெறும் படம்… கால் போட்டிங்கன்னா பாடம்’னு சொல்லி, படத்தை திரையிட்டார்.

அதில், ‘ஆரி பேசியதும், அர்ச்சனாவிடம் ஆரியை அவன் இவன் என்றதுமே காட்டப்பட்டன. ஆனாலும் சம்யுக்தா ஒத்துக்கொள்ள வில்லை. அதனால் மற்றவர்களின் கருத்தைக் கேட்டார். கமலே சொல்றார்ன்னா… சரியாகத்தான் இருக்கும்னு ஆமாம் சார் என்றார்கள். உண்மையில் ஆமா சார் சொல்ல வேண்டிய விஷயம்தான். ஆரியின் தரப்பில்தான் நியாயம் இருக்கிறது.

பாலாவிடம் கருத்து கேட்டபோது தடுமாறினார். ஒருவழியாகச் சமாளித்து ஒப்பேத்தினார். பிரேக்கில், ஆரியும் சம்யுக்தாவும் சமாதானம் ஆனார்கள். ஆரி இதில் நடந்துகொண்டது சரியாக இருந்தது. தீர்ப்பு மாறி வந்திருந்தால், சம்யுக்தா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். உங்கள் சண்டையில வீட்டுல உள்ளவங்கள இழுக்காதீங்கன்னு கமல் சொன்ன அட்வைஸ் மிகச் சரியானது.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

இடைவெளிக்குப் பிறகு வந்த கமல், கால் செண்டர் டாஸ்க்கில் சோம் – கேபி நன்றாகப் பேசியதைப் பாராட்டினார். சோம் எவிக்‌ஷனிலிருந்து சேவ் என அறிவித்தார். அப்படியே ரம்யா – ரமேஷ் கால் செய்ததற்கு வந்தார்.

ரமேஷ்க்கு கொடுத்த டாஸ்க், ரம்யாவுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் ஒரு காரணம் சொல்லி நாமினேஷன் செய்யணும். ‘நக்கலோடு பேசுவதால் அர்ச்சனா, காதல் கண்ணை மறைக்குதுன்னு பாலா, பாலா கிட்ட மட்டுமில்லாமல், எல்லார் கிட்டேயும் பேசணும்னு ஷிவானி… என வரிசையாக வந்தவர், கேபிக்கு காரணம் புரியால் நிறைய நேரம் யோசித்தார். ‘இப்ப புரியுதா… பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்னு’ கமல் கேட்டதும், இதை புரிய வைக்கிறதுக்குத்தான் இந்த டாஸ்க்கா… என ஜெர்க்காகி உட்கார்ந்துகொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

கேப்டனுக்கான ஸ்டார் ரேட்டிங் கேம் நடந்தது. அதில் பெரும்பாலானோர் ரியோவுக்கு 3 ஸ்டார் கொடுத்தார்கள். ரியோ சோர்வாக இருந்ததும், சில வார்த்தைகளை சிதற விட்டதும் குறையாகப் பார்க்கப்பட்டது. கேப்டனாக இருந்து, ஜெயிலுக்குப் போனதால் ஸ்டார் கொடுக்கவே யோசிக்கிறேன் என புது ரூட்டை பிடித்தார் ரம்யா. போனா போகுதுன்னு ஒரு ஸ்டார் கொடுத்தார். ஷனம் தூங்க 15 நிமிடங்கள் கேட்டதற்கு ‘அசிங்க அசிங்கமாக கேட்பேன்’னு சொன்னார்னு 1 ஸ்டார்தான் கொடுத்தார். அதற்கு முன் ஒரு மணி நேரம் தூங்க பர்மிஷன் கொடுத்தது ரியோதான் என்பது மறந்து போயிடுச்சு அவருக்கு.

நான் எதிர்பார்த்ததுபோலவே இரண்டு பேர் கேமை வேறு மாதிரி ஆடினார்கள். ஒன்று அனிதா, 4 பாயிண்ட் கொடுத்து, ஒரு விளக்கம் சொன்னார். அடுத்தவர் பாலா, அவர் 5 ஸ்டார் கொடுத்து வேறு கேம் ஆடினார். இந்த ஸ்டார் எல்லாம் ஒண்ணுக்கும் உதவாது என்பதால் ரிலாக்ஸாக எதிர்கொண்டார் ரியோ.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

தலைவரே ஜெயிலுக்குப் போறது என்பது சரியல்ல… இது இனிமே நடக்காம இருக்கணும்னு ரெடியாக வைத்திருந்த பாலிடிக்ஸ் பன்ச்சை சரியான நேரத்தில் சொன்னார் கமல். வீட்டுக்குள்ளும் கைத்தட்டல் அள்ளியது. ஷனமை எவிக்‌ஷனிலிருந்து விடுவித்தார் கமல்.

பிரேக்க்குப் பிறகு எவிக்‌ஷன் பற்றிய பேச்சுக்கு வந்தார்.

மீதமிருப்பது சம்யுக்தா, நிஷா, ரமேஷ். பலர் ரமேஷாக இருக்கக்கூடும் என நினைத்தார்கள். கடைசியாக வாங்கியவரின் ஓட்டுகளே 4 கோடிக்கும் அதிகம் என்றார். வீட்டில் உள்ளவர்கள் மிரண்டார்கள். 4 கோடி பேர் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். ஒருவர் 50 ஓட்டுகள் வரை போட முடியும் என்பது மறந்திருக்கலாம்.

பரபரப்பைக் கூட்டிக்கொண்டே போய் நிஷாவை வெளியேற்றினார். அர்ச்சனாவை விட்டால் நேரடியாக திருப்பதிக்கு நடந்தே போய் விடுவார் போல. ரியோ அழுதார். அந்தளவுக்கு நிஷாவுக்காக அர்ச்சனா அண்ட் கோ பிரார்த்தனை செய்திருக்கிறது போல. ஒரு வழியாக, சம்யுக்தாவின் பெயரைச் சொன்னார் கமல். பலருக்கும் ஆச்சர்யம்.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

பாலா அண்ட் கோ வருத்தத்தில் இருந்தது. கூடவே ரம்யாவும். அழுகை வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி விடைபெற்றார் சம்யுக்தா. அர்ச்சனா தூர நின்று பார்த்துக்கொண்டிருந்தார். மீம் க்ரியேட்டருக்கு நல்ல போட்டோ கிடைத்தது. ‘அடுத்த பாயாசம் யாருக்கு?’ என யோசிப்பதாக மீம் போட்டிருப்பர்கள். இன்னொன்று ஷிவானியின் முகத்தில் கொஞ்சம் சோகத்தைக் காட்டினார். லேசாக உசுப்பினால் அழுதுடுவார் போலிருந்தது. பாலாவுக்கு அடுத்து ஷிவானி அதிகம் பேசியது சம்யுக்தாவிடம்தான். ’ரோபா வருத்தப்படுது’னு இதை மீக் க்ரியேட் பண்ணுவார்கள்.

’ஒருவர் வெளியே போகும்போது சிலர் அழுவாங்க. ஏன் அழுவுறாங்கனு நினைப்பேன். அது இப்பதான் புரியுது. அம்மா மாதிரி நினைச்சேன். அதான் கொஞ்சம் வலிக்குது’ என ஆஜித் ஒரு பக்கம் முணகினார். கேபி ஆறுதல் சொல்லிட்டு இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

‘நான் நாமினேட் பண்ணிதான் வெளியே போய்ட்டாங்க’ என்று அனிதா அணத்துவதுபோல என்னாலதான் அவங்க வெளியே போனாங்க என்ற கிரடிட்டை கோரிட்டு இருந்தாங்க. அது ஒரு விளக்கம் வேற. ஷப்பா….

சம்யுக்தா வெளியே வந்தபோது, அவருக்கான ‘பயண வீடியோ’ (இனி குறும்படம்ன்னு கமல் சொல்லமாட்டார் போல) போடப்பட்டது. இந்த வாரம் போவேன்னு நினைக்கல. ஆனா, மகனைப் பார்க்க போறது சந்தோஷம்னு கிளம்பினார் சம்யுக்தா,

வீட்டுக்குள், ‘நான் எவ்வளவு பெருந்தன்மையா நடந்துகிட்டேன். பார்த்தியா’ என எல்லோரிடமும் அணத்திட்டு இருந்தார். ‘ரஜினி முருகன்’ படத்தில் நல்லா பேசறவர்களை பஞ்சாயத்து பேச கூப்பிட டிம் சேர்ப்பதுபோல,  அர்ச்சனா ஆரியை தம் குழுவுக்குள் இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். ஓரளவு அது சாத்தியம்தான் போல. ஏனெனில், ஷனம், அனிதாவிடமிருந்து விலகி விட்டார். இன்னொரு பக்கம் ஜெயில் தோஸ்து மூலம் ரியோவிடம் நெருங்கிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்! – சம்யுக்தா எவிஷனுக்கு இதுதான் காரணம்

கமல் அறிமுகப்படுத்திய புத்தகம் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’. வண்ணநிலவனனோட தம் அறிமுகம், அவள் அப்படித்தான் படத்தில் வன்ணநிலவன் வசனம் எழுதியது எனக் கூறினார் கமல்.