பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது… 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது… 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்

பீகாரில் நேற்று அம்மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்களித்து சென்றனர்.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் மொத்தம் 71 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு சாவடிகளில் நடந்த இடங்களில் கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது மற்றும் கோவிட்-19 விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது… 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்
வாக்களிக்க ஆர்வமாக வந்த வாக்காளர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் கட்ட தேர்தல் நடந்த 71 தொகுதிகளில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நடைபெற்ற 71 தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. சில நக்சல்கள் பாதிப்பு உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு 4 மணிக்கு முடிந்தது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது… 2.15 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்
வாக்காளர்கள்

தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு ஆப்பின் தற்காலிக தகவல்படி (நேற்று இரவு 10 மணி நிலவரப்படி) 54.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 2015ம் சட்டப்பேரவை தேர்தலில் போது நடந்த வாக்குப்பதிவை காட்டிலும் குறைவாகும். இது குறித்து பாட்னாவில் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் கூறுகையில், 2015 சட்டப்பேரவை தேர்தலின் போது 54.75 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது என தெரிவித்தது.