சென்னை அணி மோதும் முதல் போட்டி இன்று – ISL கால்பந்து திருவிழா

 

சென்னை அணி மோதும் முதல் போட்டி இன்று – ISL கால்பந்து திருவிழா

தமிழ்நாட்டில் மக்கள் மழையில் நனைந்துகொண்டிருக்க, கால்பந்து ரசிகர்கள் போட்டிகளின் பரபரப்பில் சூடாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆம். ISL கால்பந்து திருவிழா தொடங்கி ஆட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டன. கொரோனா பாதிப்பால் பல போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிந்தது. இந்நிலையில் பெரிய அளவான போட்டி வெற்றிகரமாக கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது.

முதல் போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. ராய்கிருஷ்ணாவின் அதிரடி கோல் ATK Mohun Bagan அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

சென்னை அணி மோதும் முதல் போட்டி இன்று – ISL கால்பந்து திருவிழா

இரண்டாம் போட்டியில் NorthEast United FC அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது NorthEast United FC அணி. இதில், NorthEast United FC அணி 1:0 எனும் கணக்கில் மும்பையை வென்று, இந்தத் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மூன்றாம் போட்டி, கோவா vs பெங்களூரூ என்று இருந்தது. இரு அணிகளும் அதிரடியாக கோல்களைப் போட்டனர். ஆனால், போட்டியின் சமனில் முடிந்தது.

சென்னை அணி மோதும் முதல் போட்டி இன்று – ISL கால்பந்து திருவிழா

இன்று நான்காம் போட்டி. இதில் மோதிக்கொண்ட ஒடிசா மற்றும் ஹைதராபாத் அணிகள். இரு அணிகளுமே இன்னும் ஒருமுறைக்கூட ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றதில்லை. அதனால், முதல் போட்டியிலிருந்தே வெற்றியை தனக்காக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், வெற்றி முகம் ஹைதராபாத் பக்கமே இருந்தது. 1 கோல் போட்ட ஹைதராபாத் எதிரணியை கோல் போடாமல் பார்த்துகொண்டு வெற்றியைப் பெற்றது.

இன்றைய போட்டி சென்னை Vs ஜாம்ஷெட்பூர். இந்தத் தொடரில் சென்னை அணியின் முதல் போட்டி இன்று. அதனால், சென்னை ரசிகர்கள் ஆவலோடு இந்தப் போட்டியை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.