நாளைக்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அதிரடி

 

நாளைக்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அதிரடி

உலகமே பயப்படும் ஒரு சொல் கொரோனா.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 1,62,95,458 பேரும், இந்தியாவில் 98,27,026 பேரும், பிரேசில் நாட்டில் 68,36,313 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 2,46,530 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

நாளைக்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அதிரடி

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம். அமெரிக்காவில் 3,019 இறந்திருக்கிறார்கள்.

இதனால் கொரோனா தடுப்பூசி அவசியமாக மட்டுமல்லாமல் அவசரமாகத் தேவைப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது.

நாளைக்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அதிரடி

தற்போது கிடைத்திருக்கும் செய்தியின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், அமெரிக்காவின் வயது முதிர்ந்த சீனியர் குடிமக்களுக்கும், கொரோனா தடுப்பு பணிகளில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் அடுத்தக் கட்டமாக இம்மாத இறுதியில் மற்றவர்களுக்குக் கிடைக்க வழி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.