தமிழகத்தில் முத்துமாரிக்கு முதல் கொரோனா தடுப்பூசி!

 

தமிழகத்தில் முத்துமாரிக்கு முதல் கொரோனா தடுப்பூசி!

கொரோனா வைரஸுக்கு முட்டுக்கட்டை போடும் காலம் வந்துவிட்டது. வைரஸை எதிர்க்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நாடு முழுவதும் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவாக்சின் மருந்துகளும் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்படவிருக்கிறது. அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் முத்துமாரிக்கு முதல் கொரோனா தடுப்பூசி!

ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் 28 நாளைக்கு மது அருந்தக் கூடாது, இரண்டு முறையும் ஒரே தடுப்பூசியையே செலுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் முத்துமாரிக்கு முதல் கொரோனா தடுப்பூசி!

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் முதல் தடுப்பூசி முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை ராஜீவ் காந்தி அரசு மருந்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் 36 வயதான முத்துமாரிக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.