இன்று முதல் கொரோனா COVAXIN தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை!

இன்று முதல் கொரோனா COVAXIN தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

இன்று முதல் கொரோனா COVAXIN தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை!

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் கொரோனா COVAXIN தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை!

இந்நிலையில் “COVAXIN தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான தன்னார்வலர்களை சேர்ப்பதன் மூலம் சோதனைகளைத் தொடங்க வாய்ப்பு என்றும் சோதனையில் பங்கேற்க 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர் என்றும் கூறியுள்ளது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் 100 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிக்க உள்ளனர்.