டெல்லி மோடி விழாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் எதிர்ப்பு கருவி!

டெல்லி மோடி விழாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் எதிர்ப்பு கருவி!

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிய விழாவில் முதன் முறையா ஆன்டி டிரோன் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மோடி விழாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் எதிர்ப்பு கருவி!
சுதந்திரதினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பேசினார். கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் பங்கேற்பு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தற்போது டிரோன் மூலம் வீடியோ, புகைப்படம் எடுப்பது அதிகரித்து வரும் நிலையில், டிரோன் மூலம் தாக்குதல் நடத்தவும் அச்சுறுத்தல் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளவாட ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கியுள்ள ஆன்டி டிரோன் சிஸ்டம் செங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லி மோடி விழாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் எதிர்ப்பு கருவி!
இந்த ஆன்டி டிரோன் கருவியானது மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன் கருவியின் செயல்பாட்டைக் கண்டறிந்து அதைச் செயல் இழக்கச் செய்யும். மேலும் இதில் உள்ள லேசர் கருவி 1 முதல் 2.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பறக்கும் டிரோன்களை தரையிறக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.