“கொரோனா வார்டில் தீ” இறந்த 13 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

“கொரோனா வார்டில் தீ” இறந்த 13 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 நோயாளிகள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வார்டில் தீ” இறந்த 13 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 13 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

“கொரோனா வார்டில் தீ” இறந்த 13 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

இந்நிலையில் மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.