வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், எல்லா மதத்தினரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டுச் செல்லும் இந்த தலம் பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டட அமைப்பில் இந்தியாவிலுள்ள ஐந்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு வேளாங்கண்ணியில் திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும் என பேரலாயம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனியும், செப்டம்பர் 8 ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்று எளிமையான முறையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.