பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா; கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு

பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா; கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி  வழிபாடு

ஈரோடு

ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயிலில் குண்டம் தேர் திருவிழாவை ஒட்டி நடப்பட்ட கம்பத்திற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா; கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி  வழிபாடு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் தேர் திருவிழா கடந்த 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று கோயில் கம்பத்திற்கு ஏராளமான பெண்கள், புனித நீர் மற்றும் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த வருடம் பொதுமக்கள் குண்டம் இறங்கவும், தேரை வடம்பிடித்து இழுக்கவும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டு, 6ஆம் தேதி கோயில் பூசாரி மட்டும் குண்டம் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா; கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி  வழிபாடு

அதேபோல் தேரோட்டத்திற்கு பதிலாக தேர் பூஜையும், 7ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 8ஆம் தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்று, 10ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுவதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.