ஐ.டி, பி.பி.ஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதியை நீட்டித்த மத்திய அரசு!

 

ஐ.டி, பி.பி.ஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதியை நீட்டித்த மத்திய அரசு!

ஐ.டி, பிபிஓ உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கான வழிகாட்டுதல்களை டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீட்டித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு துறைகளும் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. நிறுவனங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த வழிகாட்டுதல்கள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

ஐ.டி, பி.பி.ஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதியை நீட்டித்த மத்திய அரசு!கொரோனாத் தொற்று குறையவில்லை, அலுவலகங்கள் திறக்க கட்டுப்பாடுகள் உள்ளன. ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு தளர்வுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், ஐ.டி, பி.பி.ஓ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி, பி.பி.ஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதியை நீட்டித்த மத்திய அரசு!
தற்போது ஐ.டி, பி.பி.ஓ துறையில் 85 சதவிகித பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுகின்றனர். மிகக் குறைந்த அளவிலேயே கட்டாயம் அலுவலகம் வர வேண்டிய நிலையில் உள்ள ஊழியர்கள் மட்டுமே நேரடியாக சென்று வருகின்றனர். இந்த புதிய உத்தரவு மூலம் இன்னும் ஐந்து மாதங்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை நீடிக்கும்.