“எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது” : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட்!

 

“எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது” : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட்!

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

“எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது” : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட்!

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்-க்கு பதிலளிக்கும் வகையில் , “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மும்மொழி கொள்கைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அமைச்சர் தமிழில் ட்வீட் செய்து விளக்கமளித்துள்ளது கவனிக்கத்தக்கது.