“விவேக்கின் அகால மரணத்திற்கு அரசே பொறுப்பு”

 

“விவேக்கின் அகால மரணத்திற்கு அரசே பொறுப்பு”

நடிகர் விவேக் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

“விவேக்கின் அகால மரணத்திற்கு அரசே பொறுப்பு”

இந்நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு வரை ஆரோக்யமாக இருந்த சின்னக்கலைவாணர் திரு. விவேக் அவர்கள் அந்த தடுப்பூசி எடுத்து கொண்ட பிறகு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை காலமானார் எனும் தகவலறிந்து துயருற்றோம்.

“விவேக்கின் அகால மரணத்திற்கு அரசே பொறுப்பு”

நன்றாக ஆரோக்கியமாக இருந்த அவருக்கு 100% இருதய அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருப்பது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை மறைக்கவே மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு கபட நாடகம் ஆடுகிறதோ..? என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

பல கோடி மக்களை மகிழ்வித்த கலைஞனின் அகால மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும். அவரது மறைவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பிலும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.