சபாநாயகராக இன்று அப்பாவு பதவியேற்கிறார்!

 

சபாநாயகராக இன்று அப்பாவு பதவியேற்கிறார்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான திமுகவின் அப்பாவு இன்று பதவியேற்கிறார். துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான கு.பிச்சாண்டி இன்று காலை பதவியேற்கிறார்.

சபாநாயகராக இன்று அப்பாவு பதவியேற்கிறார்!

அப்பாவுவை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கின்றனர். ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான அப்பாவு சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் பெற்றவர். 1996இல் தமாக சார்பிலும், 2001இல் சுயேட்சையாகவும், 2006ல் திமுக சார்பிலும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற அப்பாவு தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றார்.

சபாநாயகராக இன்று அப்பாவு பதவியேற்கிறார்!

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான பிச்சாண்டி இன்று பதவியேற்கிறார் பிச்சாண்டி. திருவண்ணாமலை எம்எல்ஏவாக 4 முறை, கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏவாக 2முறை தேர்வானவர் பிச்சாண்டி. பிச்சாண்டி 1989,1996, 2001, 2006 தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார். கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக 2016, 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று தேர்வானார்.1984 திருவண்ணாமலை நகராட்சி வார்டு உறுப்பினராக இருந்த பிச்சாண்டி,1996ல் வீட்டுவசதி துறை அமைச்சரானார்.