“இந்தியாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார் “

 

“இந்தியாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார் “

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் ரூ. 12, 110 கோடியை தள்ளுபடி செய்தார். கொரோனா மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கடன் சுமையை குறைக்கும் வகையில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெருவித்தனர்.

“இந்தியாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார் “

இந்நிலையில் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வந்த விவசாய சங்கங்களை தேர்ந்தவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாதன்,பயிர்க்கடன் ரத்து செய்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். இதை எங்களால் மறக்க முடியாது. இந்தியாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், எங்களின் கோரிக்கையை ஏற்று நிதி நெருக்கடியிலும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது பாராட்டுகுரியது என்றார்.