Home அரசியல் 1947 முதல் 2019 வரை இந்தியா... வல்லரசை நோக்கி நடைப்போடும் சாகச பயணம்!!

1947 முதல் 2019 வரை இந்தியா… வல்லரசை நோக்கி நடைப்போடும் சாகச பயணம்!!

சுதந்திரம் பெற்று 73ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த 73 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 73ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த 73 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது.

independence day

1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு வரை ஆங்கிலேயர்கள் நம்நாட்டில் ரயில் வழித்தடங்கள், பாலங்கள், பாரம்பரிய கட்டடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுத்து முன்னேற்றத்திற்கு மைல்கல்லாக இருந்துள்ளது. அன்றைய ஆட்சியில் பெரும்குறையாக இருந்தது ஜனநாயகமற்ற, எதேச்சதிகார ஆட்சி என்பதுதான். எந்த ஒரு குறையையும் மக்கள் பிரதிநிதிகளிடம் கூறி நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில், கிடைப்பதை ஏற்று வாழ்ந்தனர் மக்கள். ஆனால், சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியதும் மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன. அதில் முக்கியமான வளர்ச்சி, சாலைக் கட்டமைப்பில் ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பரந்து விரிந்த இந்தியாவில் வெறும் 36,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே சாலை வசதி இருந்தது. இப்போது 12 மடங்கு அதிகரித்து சுமார் 40 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

independence day

சுதந்திரம் பெற்றபோது நாட்டின் மொத்த ரயில் பாதையின் நீளம், 53 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. இப்போது அது 63 ஆயிரத்து 500 கிலோ மீட்டராக உயர்ந்திருக்கிறது. மொத்த இருப்புப் பாதையின் நீளம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் அதிகரித்திருக்கிறது. உலக அளவில் ரயில் பாதை நீளத்தில் இந்தியா 7ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்றபோது கொல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை விமான நிலையங்களே இருந்தன. ஆனால், இப்போது 20 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மட்டும் திருவனந்தபுரம், ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு, சென்னை மட்டுமின்றி இப்போது 20 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும், இந்தியாவில் இப்போதுள்ள மொத்த விமான நிலையங்கள் 123ஆக உயர்ந்திருக்கிறது.

independence day

சுதந்திரம் பெறும்போது அரபிக் கடலில் குஜராத், மகாராஷ்ட்ரா, கேரளா, வங்கக் கடலில் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகியவையே பிரதானமாக இருந்தன. இப்போது இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் 38. இவை தவிர 187 சிறிய துறைமுகங்களும் 23 பெரிய மீன்பிடி துறைமுகங்களும் 93 சிறிய மீன்பிடி துறைமுகங்களும் இருக்கின்றன.

சுதந்திரம் பெற்று 22 ஆண்டுகளுக்குப் பி‌றகுதான் 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடங்கப்பட்டது. அப்போது சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட்டின் பாகங்களை ஏற்றிக் கொண்டு போய், விண்வெளியில் சோதித்தது இந்தியா. அதற்காக சர்வதேச நாடுகள் பலவற்றின் கேலிக்கும் ஆளான இஸ்ரோவை இன்று உலகமே திரும்பிப் பார்த்து வியக்கிறது. ஆம், சமீபத்திய சந்திரயான் -2 திட்டத்தின் மூலம் நிலவை ஆராயும் இஸ்ரோவின் விண்வெளிச் சாதனைகள் ராக்கெட் வேகத்தில் பறக்கின்றன.

chandrayan 2

போக்குவரத்து, சாலைக் கட்டமைப்பு, உற்பத்தி, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம், மேலாண்மை, மருத்துவம், கல்வி என எல்லாத் துறைகளிலும் ஆங்கிலேயேர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து பல மடங்கு முன்னேற்றம் கண்டு, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றம் கண்டிருக்கிறது இந்தியா. எனவே இந்தியாவின் அடுத்த இலக்கு வல்லரசு பயணம்… இன்னும் சில ஆண்டுகளில் அந்த சாதனையையும் நனவாக்கி வெற்றிநடை போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

மாவட்ட செய்திகள்

Most Popular

“கோழியோடு உறவு கொண்ட கணவன் ,அதை படம் பிடித்த மனைவி” -கடைசியில என்னாச்சு பாருங்க ..

ஒரு கணவர் கோழியோடு உறவு கொள்ளும் காட்சியை அவரின் மனைவி படம் பிடித்து போலீசில் போட்டு கொடுத்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார் .

“இவர்கள் நல்ல தமிழ்த்தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை” : இயக்குநர் அமீர் கண்டனம்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளை தவறாகப் பேசியும் மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்று இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்றுதான்....

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!