கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

இந்நிலையில் ஜோ பிடன், துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்து.

உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து கமலா ஹாரீஸ்க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்திய வம்சாவளி பெண் என்பதால் அதுவும் தமிழ் பெண் என்பதால் தமிழகத்திலிருந்தும் பலரின் வாழ்த்துகள் சென்றுகொண்டிருக்கின்றன.

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அக்கட்சிக்கு தேர்தல் நிதி அளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதாம். சுமார் 1,50,000 பேர் புதிதாக தேர்தல் நிதி அளிக்க முன் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரே நாளில் 11 மில்லியன் டாலர் தேர்தல் நிதி வரவாகியுள்ளது என்பது வியக்க வைக்கும் செய்தி.

இன்னும் அடுத்தடுத்த நாள்களில் எதிர்பாராத அளவு நிதி வசூலாகும் எனக் கணிக்கிறார்கள்.