2021 சட்டமன்ற தேர்தல் : இன்று முடிவாகும் தேதி…!

 

2021 சட்டமன்ற தேர்தல் : இன்று முடிவாகும் தேதி…!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது . இதனால் தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதேபோல் கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்கு தேர்தல் நடக்க உள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல் : இன்று முடிவாகும் தேதி…!

தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அதில் உள்ள புகார்களை சரி செய்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.அத்துடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரில் வருகை தந்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . இதில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவேண்டும், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு முன் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டது.

2021 சட்டமன்ற தேர்தல் : இன்று முடிவாகும் தேதி…!

இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது? வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ,அத்துடன் தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் தேர்தல் அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.