மன்னிப்பு கேட்ட அசாம் பா.ஜ.க. அமைச்சர்.. பிரசார தடையை 24 மணி நேரமாக குறைத்த தேர்தல் ஆணையம்..

 

மன்னிப்பு கேட்ட அசாம் பா.ஜ.க. அமைச்சர்.. பிரசார தடையை 24 மணி நேரமாக குறைத்த தேர்தல் ஆணையம்..

அசாமில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு பா.ஜ.க. அமைச்சர் மன்னிப்பு கேட்டதையடுத்து, அவர் பிரசாரம் செய்வதற்கு விதித்து இருந்த தடை காலத்தை 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்தது.

அசாமின் அமைச்சரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில், தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) பயன்படுத்தி சிறையில் அடைத்து விடுவேன் என்று போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஹக்ராமா மொஹிலாரியை எச்சரிக்கை விடுத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மன்னிப்பு கேட்ட அசாம் பா.ஜ.க. அமைச்சர்.. பிரசார தடையை 24 மணி நேரமாக குறைத்த தேர்தல் ஆணையம்..
ஹக்ராமா மொஹிலாரி

போடோலாந்து மக்கள் முன்னணியும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தன. இதனையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து ஹக்ராமா மொஹிலாரியை நான் மிரட்டும் நோக்கில் பேசவில்லை என ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுத்தார்.

மன்னிப்பு கேட்ட அசாம் பா.ஜ.க. அமைச்சர்.. பிரசார தடையை 24 மணி நேரமாக குறைத்த தேர்தல் ஆணையம்..
இந்திய தேர்தல் ஆணையம்

இருப்பினும் தேர்தல் ஆணையம், பொது கூட்டங்கள் ஊர்வலம், பேட்டி, இதர மீடியாக்களில் தேர்தல் பிரசாரம் செய்ய ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்தது. இதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியதுடன், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றில் தானும் வேட்பாளராக உள்ளதால் தடையை 24 மணிநேரமாக குறைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஹிமந்தா பிஸ்வா சர்மா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவரது பிரசார தடை காலத்தை 24 மணி நேரமாக குறைத்தது. இதனால் கடைசி கட்ட தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கான கடைசி நாளான இன்று ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரசாரம் செய்வதில் எந்த தடையும் இருக்காது.