மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமையன்று காலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென வன்முறை ஏற்பட்டது. இதனை தடுக்க மத்திய படையினர் முயற்சி செய்தபோது வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
திரிணாமுல் காங்கிரஸ்

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், யாராவது தனது வரம்பை தாண்டினால் சித்லாகுறிச்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். பல இடங்களில் சித்லாகுறிச்சியாக சம்பவங்கள் நடக்கும் என்பது மாதிரி பேசி இருந்தார். இதனையடுத்து திலிப்கோஷ் மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் கொடுத்தது.

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
தேர்தல் ஆணையம்

இதனையடுத்து சித்லாகுறிச்சி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி திலிப் கோஷூக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து அவரும் விளக்கம் கொடுத்தார். இருப்பினும் திருப்தி அடையாத தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதற்காக 24 மணி நேரம் (ஏப்ரல் 15 இரவு 7 மணி முதல் ஏப்ரல் 16 இரவு 7 மணி வரை) திலிப் கோஷ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது. மேலும், அவரது கருத்துக்கு எச்சரிக்கை செய்ததுடன், தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற அறிக்கைககளை பயன்படுத்துமாறும் திலிப் கோஷூக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.