Home தமிழகம் கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாகச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். மாறாக, அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்யலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சம்பந்தமாக கடந்த 2ஆம் தேதி, தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது. அதனால் பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்கவும் முடியாது” என்றனர்.

கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிமனித விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக, அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

கொரோனா பரவல்… தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...
- Advertisment -
TopTamilNews