`கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வா!’- நள்ளிரவில் லாரியை திருடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர்

`கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வா!’- நள்ளிரவில் லாரியை திருடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர்

நள்ளிரவில் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காததால் லாரியை திருடிச் சென்றுள்ளார் டிரைவர். அந்த லாரியில் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வந்துள்ளார் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

`கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வா!’- நள்ளிரவில் லாரியை திருடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உப்பு குளத் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது லாரியை கடந்த 4ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுத்தநாள் வந்து லாரியை பார்த்துள்ளார் ராமகிருஷ்ணன். ஆனால் அங்கு லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் இருந்த லாரியை அன்று மதியமே மீட்டனர். இதையடுத்து, லாரியை திருடியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். மருத்துவக் கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து, லாரி ஓட்டுநர் அசோக்கை கைது செய்தனர். இவர் புளியங்குடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

`கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வா!’- நள்ளிரவில் லாரியை திருடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர்

அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “சென்னையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். சம்பவத்தன்று நள்ளிரவு சென்னையில் இருந்து சரக்கு லாரி மூலம் திருத்துறைப்பூண்டிக்கு வந்தேன். நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதால் அங்குள்ள உறவினர் ஒருவருக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறினேன். ஆனால், உறவினரோ, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு வா என்று கூறினார். போதையில் இருந்த நான், கொரோனா பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். இரவு 12 மணிக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர்.

`கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வா!’- நள்ளிரவில் லாரியை திருடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர்

பின்னர் அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் திருவாரூருக்கு எப்படி செல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கே நின்றுக் கொண்டிருந்த லாரியை எடுத்துக்கொண்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு கொரோனா பரிசோதனை செய்தேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தால் லாரியை சென்னை கொண்டு விற்றுவிட முடிவு செய்திருந்தேன். அதற்கு முன்பே சிக்கிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.