போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி, இழுத்துச் சென்ற ஓட்டுநர்: வைரல் வீடியோ!

 

போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி, இழுத்துச் சென்ற ஓட்டுநர்: வைரல் வீடியோ!

டெல்லியில் வாகனத்தை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி, இழுத்துச் சென்ற ஓட்டுநர்: வைரல் வீடியோ!

டெல்லி துவாலா கவுன் நகரில் வழக்கம் போல, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியே போக்குவரத்து விதிகளை மீறி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. அதனை பார்த்த போக்குவரத்து காவலர் குறுக்கே சென்று, காரை நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் காரை ஓட்டி வந்த நபர், காரை நிறுத்தாமல் காவலர் மீது மோதி சில மீட்டர் தூரம் வரையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி, இழுத்துச் சென்ற ஓட்டுநர்: வைரல் வீடியோ!

காரின் முன்பக்கம் தொங்கிய படியே அந்த காவலர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, அவரை கீழே விழ வைத்த ஓட்டுநர், அங்கிருந்து காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். போக்குவரத்து விதிகளை மீறியதோடு, காவலர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.