Home அரசியல் 200 தொகுதிகள்-கூட்டணி கட்சிகள்- உதயசூரியன் - திமுக கனவு பலிக்குமா ?

200 தொகுதிகள்-கூட்டணி கட்சிகள்- உதயசூரியன் – திமுக கனவு பலிக்குமா ?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் நிற்க வேண்டும் என அன்பில் மகேஷ் கூறிய விவகாரம் கூட்டணி கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
’அப்படி எதிர்பார்ப்பது தனது விருப்பம்’ என மகேஷ் கூறினாலும், அது அவரது கருத்து கிடையாது என்றும், இளைஞரணி தலைவர் உதயநிதியின் கருத்தை அன்பில் மகேஷ் முன்மொழிந்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

Anbil Mahesh (@Anbil_Mahesh) | Twitter

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது உதயநிதி இந்த கருத்தை வலியுறுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது 200 தொகுதிகள் என உதயநிதி சார்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது 41 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. திமுகவின் ஆட்சி அமைக்கும் கனவு காங்கிரசால் பறிபோனதாக திமுக நிர்வாகிகளின் குமுறினர். திமுக எளிதில் வெற்றி பெறும் தொகுதிகளைக் கூட காங்கிரஸ் தோற்றதை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை என கூறி வருகின்றனர். அதனால் இந்த முறை காங்கிரசுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வரை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கலாம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ 60 தொகுதிகள்வரை கேட்க உள்ளதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைமை, உத்தேச பட்டியல் தயாரித்துள்ளதாகவும், 60 தொகுதிகளை பெற வலியுறுத்துவது என்கிற நிலைபாட்டையும் எடுத்திருக்கிறார்களாம்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை திமுக ஒதுக்க வாய்ப்பில்லை என்பதுடன், பிற கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க வலியுறுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகின்றன.

தற்போது கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளன. 2016 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு இவர்கள் சேர்ந்து அமைத்த மக்கள் நல கூட்டணியும் ஒரு காரணம். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வேறு வழியில்லாமல் திமுக கூட்டணியில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் தற்போது, திமுக தலைமையில் உள்ளவர்களிடம் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு இருப்பதாகவே கூறப்படுகிறது. கூட்டணி கட்சியினரை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைக்கலாம் என்று சொன்னதற்கு மு.க. ஸ்டாலின் மறுப்பு சொல்லிவிட்டார் என கூறப்பட்டாலும் இன்னனும் தீர்மானமான முடிவு எட்டவில்லை என்றே கூறப்படுகிறது.

காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கேட்டு, கிடைக்கவில்லை என்றாலும் தற்போதைய நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணி அமைக்கவும் வாய்ப்பில்லை. அதுபோல மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினால் அவர்களும் வெளியேறும் நிலையில் இல்லை. கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியை அறிந்தவர்கள் என்பதால் அந்த முடிவுக்கு செல்ல வாய்ப்பில்லை.

இதனைத் நன்கு அறிந்துள்ளதால்தான் இளைஞரணி ஆட்களை வைத்து தலைமை ஆழம் பார்க்கிறது என்றும், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக நெருக்கடி கொடுக்கும் என்றே கூறுகிறார்கள்.
அடுத்த முறையாவது ஆட்சிக் கட்டிலை பிடித்துவிட வேண்டும் என தவிக்கிறது திமுக தலைமை, அதற்கு 200 தொகுதிகள் போட்டியிடுவது என்கிற இலக்கு வைத்திருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் நிலைதான் கேலிக்கூத்தாக இருக்கப் போகிறது என்கின்றனர் அரசியல் களத்தை அறிந்தவர்கள்.

-தமிழ் தீபன்

மாவட்ட செய்திகள்

Most Popular

மோடியும், மத்திய அமைச்சர்களும் விவசாயிகளிடம் தந்திரமாக விளையாடுகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் விவசாயிகளிடம் தந்திரமாக விளையாடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு விவசாயிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, வேளாண்...

சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்… உறவினர்கள் குற்றச்சாட்டு

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமைக்கு...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… பிரதமர் மோடியை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பா.ஜக.. எம்.பி. வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சிறந்த சுதந்திர போராட்ட தலைவர்களில்...

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்றே தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன்....
Do NOT follow this link or you will be banned from the site!