கொரொனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு வேறுஒரு தாய்ப் பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்

 

கொரொனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு வேறுஒரு தாய்ப் பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்

கொரோனா தொற்று கடந்த நான்கைந்து மாதங்களாக இந்தியாவை படாதபாடு படுத்தி வருகிறது. நோய்த் தொற்று குறித்த பல சந்தேகங்கள் அவ்வப்போது நமக்கு எழாமல் இல்லை. வெளியில் செல்லும்போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டுமா… எந்த வகை மாஸ்க் அணிவது நல்லது தொடங்கி முன்னெச்சரிக்கையாக மருந்து ஏதேனும் எடுத்துக்கொள்ளலாமா என்பது வரை பல சந்தேகங்கள் எழுவது இயல்பு.

அப்படியான ஒரு சந்தேகம் இது. தாய்ப்பால் பருகும் குழந்தையின் அம்மாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிடுகிறது. இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்கிற நிலையில் உள்ள வேறொரு பெண், அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் தரலாமா? என்பதே.

கொரொனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு வேறுஒரு தாய்ப் பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்
Young mother breastfeeding her newborn baby boy at home

இந்தச் சந்தேகத்திற்கு திருச்சி ஊரக ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அலுவலராக பணிபுரியும் டாக்டர். கே. அமுதா பதில் தருகிறார்.

”குழந்தை பிறந்த ஆறு மாத காலங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.  குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கொலஸ்ட்ரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாய்ப்பால் ஊட்டும் முறைகள், தாய்ப்பால் ஊட்டும் போது எவ்வாறு ஊட்ட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம்.

கொரொனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு வேறுஒரு தாய்ப் பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்

குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின்னர் மட்டுமே தாய்ப்பால் தவிர வேறு கூடுதல் உணவுகளை கொடுக்கலாம். நான் கோவிட்-19 மருத்துவ முகாமில்தான் இருக்கிறேன். அடிக்கடி கைகளைக் கழுவுதல்; சந்தைகள் அல்லது கடைகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பான இடைவெளி விடுதல், ஆகியவற்றில் அலட்சியம் காட்டக்கூடாது.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குழந்தைக்கு நல்ல உடல் நிலையுடன் கூடிய ஒரு தாய், தாய்ப்பால் ஊட்டலாமா என்றால், இவ்வாறு தாய்ப்பால் ஊட்டலாம். ஆனால் அந்தப் பெண்மணிக்கும் கோவிட்-19 நோய் பரிசோதனை செய்யப்படுவது மிகவும் முக்கியம்” என்றும் கூறினார்.