உதறித்தள்ள தயாரான ஸ்டாலின்; தலையசைத்த மார்க்சிஸ்ட்!

 

உதறித்தள்ள தயாரான ஸ்டாலின்; தலையசைத்த மார்க்சிஸ்ட்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சியுடன் மதிமுக, விசிக ,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2,5 மதிமுகவுக்கு 6 ,விசிகவுக்கு 6 ,கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு, முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் தங்களின் தனித்துவம் வெளியே தெரிய வேண்டும் எனவும் கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததை சுட்டிக்காட்டியும் இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அக்கட்சியின் பாலகிருஷ்ணன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

உதறித்தள்ள தயாரான ஸ்டாலின்; தலையசைத்த மார்க்சிஸ்ட்!

இருப்பினும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இரட்டை இலக்கத்தில் இருந்து 9 தொகுதிகள் அளித்தால் போதும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கிவந்தது. ஆனால் திமுக தரப்பில் இருந்து 6 தொகுதிகள் மட்டுமே அளிக்கப்படும் என உறுதியாக இருந்ததால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்து வந்தது.

உதறித்தள்ள தயாரான ஸ்டாலின்; தலையசைத்த மார்க்சிஸ்ட்!

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக-மார்க்சிஸ்ட் கையெழுத்திடுகின்றன. விசிக மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளை ஏற்கனவே திமுக ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.