தனுஷ் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பு – அண்ணாமலை

 

தனுஷ் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பு – அண்ணாமலை

ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை அறிவாலயம் நிறுத்தட்டும் என்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் மேலும், அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு என்கிறார்.

தனுஷ் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பு – அண்ணாமலை

மாணவர் தனுஷ் தற்கொலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை காரணமாக சொல்லி பேசிக்கொண்டிருக்கையில் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ தனுஷ் மரணத்திற்கு திமுக தான் முழு பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ் . கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த தனுஷ் மருத்துவராகும் கனவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இதுவரைக்கும் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால் மூன்றாவது முறையும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்து இருக்கிறார் தனுஷ். இன்று தேர்வு எழுத இருந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணி வரைக்கும் கூட தனது தந்தையுடன் தனுஷ் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அதன் பின்னர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷின் இந்த மரணத்திற்கு பாஜக தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வர பாஜக அண்ணாமலையோ திமுக தான் இதற்கு முழு பொறுப்பு என்கிறார்.