திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

 

திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுகவிடம் தற்போது 180 தொகுதிகள் உள்ளன.

திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி உள்ளன.இதில் காங்கிரசுக்கு 25, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் மனித நேய மக்கள் கட்சிக்கு 2, முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது. இருப்பினும் இன்று திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக – அதிமுக கூட்டணியை தோல்வியடைய செய்யவே குறைந்த தொகுதிகளுக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளது.

திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கியது போக திமுகவிடம் இன்னும் 180 தொகுதிகள் உள்ளன. இருப்பினும் தமிழக வாழ்வுரிமை கட்சி ,கொங்கு மண்டல தேசிய கட்சிக்கு இன்னும் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது திமுக. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக இன்று அழைப்பு விடுத்துள்ளது. அதன்பிறகு அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

அதே சமயம் கிட்டத்தட்ட திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவாகியுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் இனிவரும் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதால் சுமார் 180 க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக களம்காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.