கொரோனா அச்சம்: தமிழக- கர்நாடக மாநில எல்லை கிராம சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்

 

கொரோனா அச்சம்: தமிழக- கர்நாடக மாநில எல்லை கிராம சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்

ஊரடங்கு உத்தரவால் தமிழக கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள பொதுமக்களை கட்டுப்படுத்த கிராம புற சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கர்நாடக முதல்வர் தமிழகத்திலிருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்களை கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிப்பதில்லை அவ்வாறு வந்தாலும் அவர்களை தனிமைப்படுத்தப்படுவார்கள் என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள சாலைகளில் அப்பகுதி மக்கள் பள்ளங்கள் தோண்டி முள்வேலி அமைத்தும் தடுத்து வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களிலிருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் நாள்தோறும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக தற்போது தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதால் இரு மாநிலத்திலிருந்து செல்லக்கூடிய தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் இருந்து செல்பவர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் 5 அடி ஆழத்திற்கு அகழி போல் தோண்டப்பட்டுள்ளதால் சில இடங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டரை கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி வழியே செல்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சம்: தமிழக- கர்நாடக மாநில எல்லை கிராம சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்

இரு மாநில அரசுகளும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் எல்லையோர கிராம பகுதிகளில் தங்களுடைய தேவைக்கான உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து செல்லக்கூடிய அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளது அதேபோல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கூட மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் தடுத்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதன் காரணமாக இரு மாநிலத்தில் உள்ள கிராமங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.