சட்டமன்ற தேர்தலுக்கு முழு மூச்சாக களமிறங்கும் அதிமுக!

 

சட்டமன்ற தேர்தலுக்கு  முழு மூச்சாக களமிறங்கும் அதிமுக!

வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு  முழு மூச்சாக களமிறங்கும் அதிமுக!

சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி நடத்திவருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு  முழு மூச்சாக களமிறங்கும் அதிமுக!

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து தரலாம் .தமிழகம் ,புதுச்சேரி ,கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறலாம்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் . விருப்பமனுவுக்கு தமிழ்நாட்டில் ரூ. 15,000, புதுச்சேரியில் ரூ.5 ஆயிரம், ரூ. 2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுவை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்