டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தது

 

டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

இன்று டாஸ் விண் பண்ணிய சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். இதனால், முதலில் டெல்லி வீரர்கள் பேட்டிங் ஆட விருக்கிறார்கள்ஒரு வேகப்பந்து பவுலர் (சாம் கரண்), மீடியம் ஃபாஸ்ட் பவுலர்கள் இருவர் (தீபக் சாஹர், ஜோஷ் ஹஷிவுட்), மூன்று ஸ்பின் பவுலர்கள் (பியூஸ் சாவ்லா, ஜடேஜா, கேதர் ஜாதவ்)  இன்று களம் இறங்குகிறார்கள்.

டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தது

பிரிதிவ் ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஓப்பனிங் இறங்கினார்கள். நிதானமாக தனது ஆட்டத்தை மேற்கொண்டது இந்த ஜோடி. பிறகு பிரதிவ் ஷா அடித்து ஆடத் தொடங்கினார். அவரோடு இணைந்துகொண்டார் ஷிகர் தவான். தவான், 1 சிக்ஸர், 3 ஃபோர்களும் அடித்து 35 ரன்கள் எடுத்த நிலையில் பியூஸ் சாவ்லா வீசிய பந்தில் அவுட்டானர்.

டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தது

அடுத்த இரண்டாம் ஓவரில் பியூஸ் சாவ்லா வீசிய பந்தை இறங்கி ஆட வந்தார் பிரதிவ் ஷா. ஆனால், பந்து பேட்டில் படாமல், கீப்பர் தோனியிடம் சென்றதும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாக்கினார். அடுத்து, ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் இறங்கினர். இருவரும் விக்கெட் விழவிடாமல் அதேநேரம் ரன் ரேட் குறையாமலும் ஆடினர்.  அணியின் ஸ்கோர் 161 இருக்கையில் சாம் கரண் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் அடித்ததை பிரமாதமாக கேட்ச் பிடித்தார் தோனி.

சென்ற மேட்சில் சிறப்பாக மார்கஸ் ஸ்டொனிஸ் களம் இறங்கினார். மறுபுறம் ரிஷப் பண்ட் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் எடுத்தனர்.