சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம்.. டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு.. இன்று அறிவிப்பு?

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம்.. டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு.. இன்று அறிவிப்பு?

டெல்லியில் நிலவும் மோசமான கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு லாக்டவுன் குறைந்தபட்சம் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டமாக உள்ளது. இதனால் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் கடந்த திங்கட்கிழைமை இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 10 மணி வரை 6 நாட்களுக்கு லாக்டவுன் அமலில் இருக்கும். இந்நிலையில் டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம்.. டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு.. இன்று அறிவிப்பு?
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் (கோப்புப்படம்)

டெல்லியில் கடுமையாக உயர்ந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பை குறிப்பிட்டு லாக்டவுனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் நல சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளன. இதுதவிர, லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம்.. டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு.. இன்று அறிவிப்பு?
ஆக்சிஜன் சிலிண்டர்

பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: லாக்டவுனை நீட்டிப்பதற்கான உத்தரவை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வெளியிடும். ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் ஆக்சிஜன் நெருக்கடிக்கு வழிவகுத்த கோவிட்-19 பாதிப்பு திடீரென அதிகரிப்பு மற்றும் அதிக நேர்மறை விகிதம் காரணமாக இந்த முடிவு (லாக்டவுன் நீட்டிப்பு) எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் லாக்டவுன் நீக்கப்பட்டால் டெல்லியில் கடுமையான சட்டம் ஒழுங்கு நிலைமை ஏற்படக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.