ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  கரையை கடந்தது!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடந்தது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  கரையை கடந்தது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது 55 கிமீ முதல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது .அதிகபட்சமாக மாமல்லபுரம், பெரியாறு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் 30மிமீ மழையும், சின்ன கல்லார், காஞ்சிபுரம், உத்தரமேரூர் சோளிங்கர் 20 மிமீ மழையும் பெய்தது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  கரையை கடந்தது!

வங்கக்கடல் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டதையடுத்து தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகத்தில் பயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.