சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் : டிடிவி தினகரன் விமர்சனம்!

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் : டிடிவி தினகரன் விமர்சனம்!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படவுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும்
மது வாங்க வருவோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் இயங்காது போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மதுபான கடைகள் திறப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் : டிடிவி தினகரன் விமர்சனம்!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது.எனவே,சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் : டிடிவி தினகரன் விமர்சனம்!

சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படியோர் முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் : டிடிவி தினகரன் விமர்சனம்!

கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று வலியுறுத்தியுள்ளார்.