10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் 8 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காணொலி காட்சி மூலம் பேசிய அவர், ’10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,323 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது . கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.