அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை மீண்டும் 1000-யைத் தாண்டியது

 

அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை மீண்டும் 1000-யைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரத்து 185 பேர். இது நேற்றைய எண்ணிக்கையை விட 4 லட்சத்து 43 ஆயிரத்து 537 அதிகம்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 341 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 9 லட்சத்து 14 ஆயிரத்து 158 நபர்கள்.

அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை மீண்டும் 1000-யைத் தாண்டியது

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 85,84,850 பேர் பாதிக்கப்பட்டு, உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 63,663 பேர். இந்த எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில்தான் அதிகம்.

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். அமெரிக்காவில் 1,225 பேர் இறந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து மொத்தம் 2,27,409 பேர் அமெரிக்காவில் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை மீண்டும் 1000-யைத் தாண்டியது

அமெரிக்காவில் புதிய நோய்த் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டும் அதிகரித்து வருகிறது. செப்டம்பட் மாதம் 23-ம் தேதி அன்று ஒருநாளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,114 பேர். அதற்கு அடுத்து சுமார் ஒரு மாதக் காலத்தில் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடவில்லை. ஆனால், நேற்றைய இறப்பு எண்ணிக்கை 1,225 பேர். இதனால் மீண்டும் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சத்தை விதைத்து வருகிறது.