மண்வெட்டி பிடியால் அடித்து மாமனாரை கொன்ற மருமகள்

 

மண்வெட்டி பிடியால் அடித்து மாமனாரை கொன்ற மருமகள்

மண்வெட்டி பிடியால் அடுத்து மாமனாரை கொலை செய்திருக்கிறார் மருமகள். இதற்கு கணவனும் உடந்தையாக இருந்திருக்கிறார். இந்த கொடூர சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அணைப்பட்டி கிராமத்தில் நடந்து இருக்கிறது. சொத்துக்காக நிகழ்ந்த இந்த கொடூர செயலுக்காக மருமகள், மகன்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

மண்வெட்டி பிடியால் அடித்து மாமனாரை கொன்ற மருமகள்

அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பொண்ணுவேல், மூர்த்தி என இரு மகன்கள். ஆறுமுகம் தனது இளைய மகனுக்கே சொத்துக்களை எல்லாம் எழுதி வைப்பதாக, இறப்பதற்கு முன்பே உயில் எழுதி வைக்கப் போவதாக சொல்லி வந்திருக்கிறார். சொத்துக்கள் முழுவதும் இளைய மகனுக்கு செல்வதாக அவர் சொல்லி வந்ததை கேள்விப்பட்ட மருமகள் சரோஜா, சொத்துக்கள் முழுவதும் கொளுந்தனாருக்கே சென்றுவிட்டால் நம்ம நிலைமை என்னாவது என்று கணவன் பொன்னுவேலுவிடம் புலம்பியிருக்கிறார்.

இதன்பின்னர் ஆறுமுகத்திடம் பேசிப் பார்த்து இருக்கிறார்கள். அதில் எந்த பிரயோசனமும் இல்லை. இளைய மகனுக்கு மூர்த்திக்குத்தான் மொத்த சொத்துக்களும் என்று உறுதியாக இருந்திருக்கிறார். இதனால் வேறு வழியின்றி அவரை கொன்று விடுவது என்று மருமகள் சரோஜா சொல்லியிருக்கிறார். அதற்கு கணவனும் அதுதான் சரி என்று தலையசைத்து இருக்கிறார்.

மண்வெட்டி பிடியால் அடித்து மாமனாரை கொன்ற மருமகள்

இதை அடுத்து மண்வெட்டி பிடியை எடுத்து ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார் மருமகள் சரோஜா. கணவனும் அதாவது ஆறுமுகத்தின் மகன் பொண்ணுவேலும் மண்வெட்டியால் அடித்திருக்கிறார்.

பலமாக அடித்ததில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்துவிட்டார். இயற்கையாக அவர் இறந்துவிட்டதாக சொல்லி வந்திருக்கின்றனர். தகவலறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சரோஜாவும் அவரது கணவர் பொண்ணு வேலு இருவரும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன், சரோஜா மற்றும் பொண்ணுவேலுவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்காக அவசரப்பட்டு எடுத்த முடிவு ஒரு குடும்பமே இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று அப்பகுதியினர் பேசி வருகின்றனர்.