தோனி படை இன்று ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது #IPL_Updates

 

தோனி படை இன்று ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது #IPL_Updates

கிரிக்கெட் ரசிகர்களின் புதுவித கொண்டாட்டம்தான் ஐபிஎல் போட்டிகள். கொரோனா நோய்த் தொற்றால் இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பர்  19- தேதி தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஐபில் அணிகளில் ரொம்பவே ஸ்பெஷலானது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்படியென்ன ஸ்பெஷல் என்றால், தல தோனிதான் கேப்டன். இந்த அணி உருவாக்கப்பட்டதிருந்து இருக்கும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே. மற்ற எந்த அணிக்கு இந்தப் பெருமை கிடையாது.

தோனி படை இன்று ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது #IPL_Updates

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. 5 போட்டிகளில் ரன்னர் அப்பாக இடம்பெற்றது. அதனால் இந்த அணி ஆடும் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மகேந்திர சிங் தோனி  தலைமையில், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடஜா உள்ளிட்ட சீனியர் வீரர்களுடன் இந்த ஆண்டு களம் இறங்குகிறது.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 15 –ம் தேதி தொடங்கி ஒரு வாரம் பயிற்சியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொண்டது.

தோனி படை இன்று ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது #IPL_Updates

தோனியின் வெற்றிப்படை இன்று ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது. அங்குச் செல்லும் வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அதன் முடிவு வரும்வரை தனித்தனியாகவே தங்க வைக்கப்படுவார்கள்.

மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் நேற்றே ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று விட்டன.