“நாட்டுக்கு கொரோனா மட்டும் டேஞ்சர் இல்லை… மத்திய அரசும் டேஞ்சர் தான்”

 

“நாட்டுக்கு கொரோனா மட்டும் டேஞ்சர் இல்லை… மத்திய அரசும் டேஞ்சர் தான்”

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது. பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் என்றால் மருத்துவக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுள்ளது. அவலக்குரல்கள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“நாட்டுக்கு கொரோனா மட்டும் டேஞ்சர் இல்லை… மத்திய அரசும் டேஞ்சர் தான்”

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் விழிபிதுங்கி போயுள்ளன. வேறு வழியே இல்லாமல் டெல்லி முழு ஊரடங்கை பிறப்பித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எப்படியாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் மாநில அரசுகள் ஆக்சிஜனுக்காகக் கையேந்தி நிற்கின்றன. ஆனால் மத்திய அரசோ எதையும் கண்டுகொள்ளவதாகத் தெரியவில்லை.

“நாட்டுக்கு கொரோனா மட்டும் டேஞ்சர் இல்லை… மத்திய அரசும் டேஞ்சர் தான்”

ஆக்சிஜனை பிச்சை எடுத்தாவது மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசைக் கடுமையாக விளாசியிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். அதேபோல எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் செயல்பாடுகளை கடும் விமர்சனம் செய்துவருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் அலை ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை எச்சரித்துக் கொண்டே இருக்கிறார். மத்திய அரசின் கொள்கைகள் தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்கிறார்.

தற்போது அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் ட்விட்டரில் களமாடி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நான் வீட்டில் தனிமையில் இருக்கிறேன், எண்ணற்ற சோகமான செய்திகள் என் பார்வைக்கு வருகின்றன. இந்தியாவின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு கொரோனா மட்டுமே காரணம் அல்ல. மக்களுக்கு எதிரான தவறான கொள்கைகளை வகுத்த மத்திய அரசும்தான் காரணம். வீண் பேச்சும் பொய்யான கொண்டாட்டங்களும் நாட்டிற்குத் தேவையில்லை. நாட்டின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வைக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.