பண மோசடி வழக்கு- அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

 

பண மோசடி வழக்கு- அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கு- அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அதன் பின்னர் திமுகவில் இணைந்து விட்டார். தற்போது இவர் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. சென்னையில் உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 5 தள்ளிவைத்தது.