’ஆதாரம் இல்லை’ ட்ரம்ப்க்கு குட்டு வைத்த நீதிமன்றம் – அமெரிக்கத் தேர்தல்

 

’ஆதாரம் இல்லை’ ட்ரம்ப்க்கு குட்டு வைத்த நீதிமன்றம் – அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் பதவியை விட்டுக்கொடுக்காத ட்ரம்ப்க்கு இன்னொரு குட்டு வைத்துள்ளது நீதிமன்றம். அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் இழுபறி இன்றும் நீடிக்கிறது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்ட்டினார். ஓரிரு நாள் இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார். ஆயினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

’ஆதாரம் இல்லை’ ட்ரம்ப்க்கு குட்டு வைத்த நீதிமன்றம் – அமெரிக்கத் தேர்தல்

ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவில் முறைகேடு எனப் புகார் அளித்தார். அதனால், அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு ஜோ பைடனே வென்றதாக அறிவிக்கப்பட்டார். அதனால், ஜோ பைடனின் செல்வாக்கு 306 ஆக உயர்ந்தது.

பென்சில்வேனியா மாகாணத்திலும் தேர்தல் நடத்தையில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘தேர்தல் நடைமுறையிலும் வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததற்கான ஆதாரமே இல்லை என்றும், ட்ரம்ப் தரப்பில் கொடுப்பட்டிருக்கும் விவரங்கள் எல்லாம் குழப்பம் தருவதாகவே இருக்கின்றன என்றும் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.

’ஆதாரம் இல்லை’ ட்ரம்ப்க்கு குட்டு வைத்த நீதிமன்றம் – அமெரிக்கத் தேர்தல்

இதனால், ஜோ பைடன் அதிபராகும் வழிகளில் இருந்த முக்கிய தடையாகக் கருதப்பட்ட இந்த வழக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றுக்கொள்வார்.