நாடு முன்னேற மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் வேண்டும் – மத்திய அமைச்சர் சொல்கிறார்

இந்தியா முன்னேற வேண்டும் என்றால் முதலில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவின் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மிகக் கடுமையான அந்த சட்டம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று கூறி வந்த பா.ஜ.க-வினர் தற்போது வளர்ச்சிக்குத் தடையாக மக்கள் தொகை பெருக்கம் இருப்பதாக கூறி மக்கள் மீது பழிபோடத் தொடங்கிவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Most Popular

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய மகளின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி காயப்படுத்தி ,சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டு மாநிலத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் டீனேஜ்...

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள்...

‘திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது’.. படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் படைப்பிடிப்பை...

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2...
Do NOT follow this link or you will be banned from the site!